பருவ மழைக்காலத்திற்கு முன்னதாக டெல்லியின் வடிகால்களை தூர்வாராமல் மத்திய பாஜக அரசு நடத்தும் எம்சிடிகள் தாமதம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி துர்கேஷ் பதக்,“ மத்திய பாஜக அரசு நடத்தும் எம்சிடிகளின் செயலற்ற தன்மையால் டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள உள்ள மொத்த வடிகால்களில் 95% அளவுக்கு 60 அடி மற்றும் சிறிய வடிகால்கள் பாஜக நடத்தும் எம்சிடிகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. பருவமழை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழலில் இதுவரை இந்த வடிகால்கள் சுத்தம் செய்யப்படவில்லை ” என்று அவர் கூறினார்.
மேலும், “இந்த வடிகால்களை சுத்தம் செய்ய 1000-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் பாஜக நடத்தும் மூன்று எம்சிடிகளிலும் சேர்த்து 50 ஜேசிபி இயந்திரங்கள்கூட இல்லை. இந்த நிலைமையை வைத்துக்கொண்டு டெல்லியை மூழ்கடிக்க நினைக்கிறீர்களா என்று பாஜக தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கும் போது பா.ஜ.க கவனக்குறைவாக இருக்கிறது. பாஜக தலைவர்கள் அரசியல் விளையாட்டு விளையாடுவதை விட முக்கியமான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பாஜக தலைமை இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து உடனடியாக வடிகால்களை சுத்தம் செய்யத் தொடங்க வேண்டும்.இதில் தாமதம் செய்வது டெல்லி மக்களை ஏமாற்றுவதாகும்” என்று துர்கேஷ் பதக் தெரிவித்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/154168.webp.webp.webp)