கர்நாடகாவில், ஸ்ரீனிவாச சாகர் நீர்த்தேக்கத்தின் சுவற்றின் மீது ஏற முயன்ற இளைஞர், தவறி கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிக்கபள்ளபுரா அருகே உள்ள ஸ்ரீனிவாச சாகர் நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் நேற்று அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அப்போது, ஒரு இளைஞர் நீர்த்தேக்கத்தின் சுவற்றின் மீது ஏறிய நிலையில், பாதி சுவற்றில் ஏறிய போது தவறிக் கீழே விழுந்தார்.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்த நிலையில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.