இலங்கையில் உச்சம் தொட்டுள்ள மரக்கறிகளின் விலை


இலங்கையில் சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய,”தக்காளி ஒரு கிலோவின் விலை 1,000 ரூபாவாகவும், போஞ்சி ஒரு கிலோவின் விலை 480 ரூபாவாகவும், கரட் 400 ரூபாவாகவும், மிளகாய் ரூ.480.00 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உச்சம் தொட்டுள்ள மரக்கறிகளின் விலை

இதேவேளை, டீசல் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகர்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்யாமை போன்ற காரணிகளால் தம்புத்தேகம விசேட பொருளாதார வலயத்திற்கு கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டுள்ளனர்.

இதனிடையே உரம் தட்டுப்பாடு காரணமாகவும் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய நடவடிக்கைகளிலிருந்து விலக வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உச்சம் தொட்டுள்ள மரக்கறிகளின் விலை



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.