வாட்ஸ்அப் வார்னிங்… 2 ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தம்

உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவ்வப்போது செயலியை புதுப்பிப்பது வழக்கம். அப்படி செய்கையில், பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன.

அதன்படி, தற்போது வரவிருக்கும் புதிய வாட்ஸ்அப் அப்டேட், iOS 10 மற்றும் iOS 11 ஓ.எஸ் சாதனங்களில் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து WABetaInfo வெளியிட்ட அறிவிப்பில், iOS 10 or iOS 11 சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது. அத்தகைய ஓ.எஸ் உபயோகிக்கும் வாட்ஸ்அப் பயனர்கள், 2022 அக்டோபர் 24க்கு முன்பு ஐஓஎஸ் வெர்ஷன் அப்டேட் செய்துவிடுங்கள். Settings > General செல்ல வேண்டும். அதில், Software Update கிளிக் செய்தால், லேட்டஸ்ட் ஐஓஎஸ் வெர்ஷன் திரையில் தோன்றும். அதற்கு அப்டேட் செய்துகொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 வெர்ஷன், தற்போது ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C ஆகிய 2 மாடல்களில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. இந்த மாடல் பயனர்களால் அக்டோபர் 24ஆம் தேதிக்கு மேல் வாட்ஸ்அப் உபயோகிக்க முடியாது.

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 மற்றும் அதன் பின் வெளியிடப்பட்ட வெர்ஷன்கள் சிறப்பானது என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S போன்ற மாடல்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்வதாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.