இலங்கையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இதுவரை 13 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர். 
இந்நிலையில் இன்று மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு, அதிபர் கோத்பய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
அதன்படி, விவசாயம் மற்றும் வனவிலங்குத்துறை அமைச்சராக மகிந்த அமரவீரவும்,  ஊடகம் போக்குவரத்துறை அமைச்சராக பந்துல குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடல் தொழில் அமைச்சராக டக்ளஸ் தேனாந்தா நியமிக்கப்பட்டுள்ளார். 
விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக  அநுருத்த ரணசிங்கேவும், கைத்தொழில்த்துறை அமைச்சராக ரமேஷ் பத்திரனவும் பொறுப்பேற்றுக்
கொண்டனர்.
நீர்வளத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்லவும், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரத்துறை அமைச்சராக விதுர விக்ரமநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
சுற்றுலாத்துறை அமைச்சராக அஹமட் நசீர்  பதவியேற்றுக் கொண்டார்.
இதனிடையே தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் கொழும்பு சென்ற நிலையில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றி,  இந்தியா இலங்கைக்கு ஒரு பெரிய சகோதரனாக இருந்து உதவி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.