டெல்லியில் மோசமான வானிலை நிலவும் சூழலில், சுமார் 40 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
18 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் இதர அருகாமை மாநிலங்களின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.