பலரின் வலி சிலருக்கு லாபம்: 30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகை உலுக்கத் தொடங்கிய கோவிட், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு உலகப் பொருளாதார மன்றத்திம் கூடியது.
அதில், ​​ஏழைகளுக்கு உதவ பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டிய நேரம் இது என்று ஆக்ஸ்பாம் கோருகிறது.

சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, “வலியிலிருந்து லாபம்” என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோய் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீஸ்வரரை உருவாக்குகிறது என்ற செய்தி சந்தர்ப்பங்களின் பலன் சிலருக்கு கிடைத்திருப்பதை உறுதி செய்கிறது.

கொரோனாவால் (Coronavirus) திடீரென செல்வந்தர்களின் செல்வம் அதிகரித்ததைப் போலவே, ஏற்கனவே வறுமையில் இருந்தவர்களின் ஏழ்மை நிலையும் மேலும் மோசமாகியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, 2022 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்கள் தீவிர வறுமைக்குக் தள்ளப்படுவார்கள் என்ரு ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையின்படி, முக்கியமான பொருட்களின் விலை, கடந்த பத்தாண்டுகளில் இருந்ததை விட வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், உணவு மற்றும் ஆற்றல் துறைகளில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தோராயமாக $1 பில்லியன் சொத்து அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?

‘வலியிலிருந்து லாபம்’ என்ற ஆக்ஸ்பாமின் அறிக்கை டாவோஸில் உள்ள உலகளாவிய உயரடுக்கினரின் பிரத்தியேகமான கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கோவிட்-19 க்குப் பிறகு பில்லியனர்களின் செல்வம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஏழைகளுக்கு உதவுவதற்காக செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டிய நேரம் இது என்று சர்வதேச தொண்டு அமைப்பு ஆக்ஸ்பாம் கோரிக்கை விடுத்தது. ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் ஒரு மில்லியன் என்ற விகிதத்தில், இந்த ஆண்டு 263 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் விழுவார்கள் என்று இந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

கோவிட் பிரச்சினை, விலைவாசி உயர்வையும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. கொரோனா தொற்றுநோய் பாதித்த சமயத்தில் ​​573 பேர் அல்லது ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒருவர் மில்லியனர்கள் ஆனார்கள். .

“கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தில் நம்பமுடியாத எழுச்சியைக் கொண்டாட டாவோஸ் வருகிறார்கள். தொற்றுநோய் மற்றும் இப்போது உணவு மற்றும் எரிசக்தி விலைகளின் தொடர் அதிகரிப்பு வறியவர்களை மேலும் ஏழ்மையில் தள்ளுகிறது. எளிமையாகச் சொன்னால், கோவிட், பணக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது”.

“இதற்கிடையில், தீவிர வறுமையின் பல தசாப்த முன்னேற்றம் இப்போது நம்ப முடியாத அளவு அதிகரித்துள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் வெறுமனே உயிருடன் இருப்பதற்காக செய்து வந்த செலவுகள், அவர்களால் எதிர்கொள்ள முடியாத அளவு அதிகரிக்கிறது” என்று ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் கேப்ரியேலா புச்சர் கூறினார்.

மேலும் படிக்க | அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை; காரணம் என்ன

“கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் அதிகரிப்புக்கு காரணம் கடின உழைப்போ அல்லது வேறு எதுவோ இல்லை. ஆனால், தொழிலாளர்கள் கடினமாக உழைக்கிறார்கள், குறைந்த ஊதியம் மற்றும் மோசமான சூழ்நிலையில் உள்ளனர். பெரும் பணக்காரர்கள் இப்போது கோவிடால் எழுந்த மோசமான நிலைமையில் இருந்து ஆக்கப்பூர்வமான பலன்களை அறுவடை செய்கிறார்கள்”.

“தனியார்மயமாக்கல் மற்றும் ஏகபோகங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது என உலக செல்வந்தர்களின் செல்வத்தின் அளவு அதிர்ச்சியூட்டும் அளவு அதிகரித்துள்ளது. தங்கள் பணத்தை வரி கட்ட வேண்டாத இடங்கலில் செல்வந்தர்கள் பதுக்கி வைத்துள்ளனர். இதற்கு அரசாங்கங்களும் உடந்தையாக இருக்கின்றன” என்று புச்சர் கூறினார்.

கோவிட்-19 நோய்த்தொற்றின் முதல் 24 மாதங்களில் கோடீஸ்வரர்களின் செல்வம் முந்தைய 23 ஆண்டுகளை விட அதிகமாக அதிகரித்துள்ளது. உலக கோடீஸ்வரர்களின் கூட்டுச் சொத்து இப்போது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.9% ஆக உள்ளது. இது 2000ம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாகும் (4.4 சதவீதம்).
 
ஆக்ஸ்பாமின் புதிய ஆய்வு, ஆற்றல், உணவு மற்றும் மருந்துத் துறைகளில் உள்ள வணிகங்கள் – இவை அனைத்திலும் ஏகபோகங்கள் உள்ளன – ஊதியங்களின் அதிகரிப்பு அரிதாகவே நிகழ்ந்தாலும், தொழிலாளர்கள் விலை உயர்வுடன் போராட முடியாமல் தவிக்கின்றனர்”.

“கடந்த இரண்டு ஆண்டுகளில், உணவு மற்றும் ஆற்றல் பில்லியனர்களின் அதிர்ஷ்டம் $453 பில்லியன் அல்லது ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் $1 பில்லியன் அதிகரித்துள்ளது. உலகின் முக்கிய எரிசக்தி நிறுவனங்களில் ஐந்து (BP, Shell, TotalEnergies, Exxon, Chevron) ஒவ்வொரு நொடியும் $2,600 லாபம் ஈட்டுகின்றன, அதே நேரத்தில் உணவுத்துறையில் 62 புதிய மில்லியனர்கள் உருவாகியுள்ளனர்.

மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.