ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டபோட்டியில் யுபுன் அபேகோன் நேற்று (22) புதிய தேசிய சாதனையையும், தெற்காசிய சாதனையையும் படைத்துள்ளார்.
இத்தாலியில் நடந்த தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்ட தூரத்தை 20.37 வினாடிகளில் நிறைவு செய்தார்.
இதன்மூலம் இந்தியாவின் அம்லான் போர்கோஹைன் 20.52 வினாடியில் நிலைநாட்டிய தெற்காசிய சாதனையை யுபுன் அபேகோன் முறியடித்தார்.
2018 ஆம் ஆண்டு இலங்கையில் வினோஜ் சுரஞ்சய 20.68 வினாடிகளில் நிலைநாட்டிய தேசிய சாதனை யுபுன் அபேகோனினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10.15 வினாடிகளில் நிறைவு செய்து தெற்காசிய சாதனையையும் படைத்துள்ளார்.