iPhone 13: ஆப்பிள்
ஐபோன் 13
, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் என்றாலே எதிர்பார்ப்புகள் பயனர்கள் மத்தியில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல தான் இந்த ஸ்மார்ட்போனும் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விற்பனையில் சாதனை படைத்தது.
இந்த வேளையில், இன்னும் சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை வெளியிடவுள்ளது. iPhone 14 ஸ்மார்ட்போன்களில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையில், நிறுவனம் தற்போது லேட்டஸ்டாக இருக்கும் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
Google Job Tool: வேலை தேடுபவரா நீங்கள் – உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது கூகுள்!
ஐபோன் 13 சலுகைகள் (iPhone 13 Offers)
பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை மிகக்குறைந்த விலையில் உங்களால் வாங்க முடியும். அதாவது. 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட ஐபோன் 13 விலை ரூ.79,900 ஆக பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
நேரடியாக கிடைக்கும் ரூ.5,000 சலுகையை கழித்தால், போனின் விலை 74,900 ஆக இருக்கும். இவ்வளவு தானா என்றெல்லாம் எண்ண வேண்டாம். எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது.
Infinix Note 12 Series: அமோலெட் டிஸ்ப்ளே; ஸ்மார்ட் அம்சங்கள் என வெளியான இன்பினிக்ஸ் பட்ஜெட் போன்!
இப்போது போனின் விலை ரூ.70,900 ஆகக் குறைந்திருக்கும். இதற்கு பின் தான் பயனர்களுக்கு டாப் கிளாஸ் ஆஃபர் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது நல்ல நிலையில் இருக்கும் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.33,000 வரை மதிப்பு கிடைக்கும்.
பிளிப்கார்ட்டின் இந்த அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் பயன்படுத்தினால் வெறும் ரூ.37,000-க்கு ஐபோன் 13 ஸ்மார்ட்போனை நீங்கள் சொந்தமாக்கலாம்.
Twitter Bots: ட்விட்டர் பாட்களை துவம்சம் செய்ய எலான் மஸ்க் கொடுத்த டிப்ஸ்!
ஐபோன் 13 அம்சங்கள் (iPhone 13 Specifications)
ஐபோன் 13 ஸ்மார்ட்போனில் 6.1″ இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே 2532×1170 பிக்சல் ரெசலியூஷனில் கொடுக்கப்பட்டுள்ளது. செராமிக் கொண்டு டிஸ்ப்ளே பாதுகாக்கப்பட்டுள்ளது. iOS 13 இயங்குதளம் இதில் நிறுவப்பட்டுள்ளது.
Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏ15 பயோனிக் சிப்செட் இந்த போனை இயக்குகிறது. இதை சக்தியூட்ட 3,227mAh பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 20W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் உண்டு.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
அசத்தல் சினிமா தர கேமராக்களை ஐபோன் 13 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதில் பல விதமாக படங்களை எடுக்க முடியும். மேலும், 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0, என்.எஃப்.சி, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவும் அடங்கியுள்ளது.