தாமரை தண்டு ஊட்டச்சத்துக்களின் சக்தியாக அறியப்படுகிறது. இதில், உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தேவையான வைட்டமின் சி நிறைந்துள்ளது; இதன் வைட்டமின் பி மன அழுத்தம் மற்றும் எரிச்சலைக் குறைக்க நல்லது; உணவு நார்ச்சத்து’ உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். மேலும், இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அத்துடன் தாமரை எண்ணெய், தோல் பராமரிப்புக்கு சிறந்ததாக அறியப்படுகிறது.
ஒவ்வொருவரின் தோல் பராமரிப்பு வழக்கம் வேறுபட்டது – ஆனால் அனைத்து வகையான சருமத்திலும், அற்புதமாக வேலை செய்யும் சில இயற்கை பொருட்கள் உள்ளன. அவற்றில் தாமரை எண்ணெய் உங்கள் சருமத்திற்கு சிறப்பான முடிவுகளைத் தரும்.
தோல் பராமரிப்பு நன்மைகள்:
தாமரை மலர்’ வைட்டமின்கள் பி மற்றும் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களின் களஞ்சியமாக உள்ளது. இவை அனைத்தும் சருமத்தை வெளிப்புறமாக குணப்படுத்த உதவும்.
தாமரை பூவின் எண்ணெய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உங்கள் முகத்தை மீண்டும் பளபளப்பாக மாற்றும்.
சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். தாமரை பூ எண்ணெய்’ சருமத்தை சீரமைத்து, ஈரப்பதத்தை மீட்டெடுக்கும்.
இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது, முகத்தின் வயதான செயல்முறையை மெதுவாக்கவும், அதே போல் முகம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றவும் எண்ணெய் உதவுகிறது.
மற்ற அத்தியாவசிய எண்ணெயைப் போலவே இதை முகத்தில் இயற்கையாகவே பயன்படுத்துவதைத் தவிர, நீங்கள் அதிலிருந்து ஒரு ஃபேஸ் பேக்கையும் செய்யலாம்.
தாமரை பூ எண்ணெயில் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தாராளமாக தடவினால் போதும். ஆரோக்கியமான, முகப்பரு இல்லாத சருமத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யுங்கள்.
நீங்களும் இதை முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“