நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திருச்சிக்கு வந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர்.
இதையடுதது இவர்கள் இருவரும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை வழுத்தியூரில் உள்ள குலதெய்வம் கோயிலில் வழிபாடு செய்தனர். பத்திரிகை மற்றும் திருமணப் பொருட்களை வைத்து சாமி தரிசனம் செய்ய வந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.