முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், `பேரறிவாளன் விஷயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு எடுத்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் பேரறிவாளனை கட்டி அணைப்பதெல்லாம் தமிழகத்திற்கும் நல்லதல்ல; தமிழக மக்களுக்கும் நல்லதல்ல. இலங்கை தமிழர்களின் அழிவுக்கு திமுகவும் காங்கிரஸ் தான் காரணம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில் “தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பின்னர் தமிழகத்தில் இடம் இல்லை என்று கூறினார். அதே போன்று தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு, தேர்தலில் ஜெயித்து ஓராண்டிற்கு பின் தற்போது தமிழகத்தில் பணம் இல்லை என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கூறியுள்ளார். இது பழைய தேர்தல் அறிக்கையை நினைவு படுத்துகிறது. இனி நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு, `தானொரு அமைச்சர் என்பதே தனக்கு இப்போதுதான் நினைவுக்கு வருகின்றது’ என்று கூறுவார்” என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசுகையில், “பேரறிவாளன் விசயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு எடுத்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் அதற்காக அவரை கட்டி அணைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது, தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நல்லதல்ல. இலங்கை தமிழர்களின் அழிவுக்கு திமுகவும் காங்கிரஸ் தான் காரணம்” என்று கூறினார்.
இதையும் படிங்க… திருப்பூர்: இரு குழந்தைகளுடன் தாயும் அடித்துக்கொலை; கொலையாளியை தேடும் போலீஸ்
மேலும் தமிழக அமைச்சரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன் “ஒவ்வொரு வீட்டிற்கும் 15 லட்ச ரூபாய் கொடுக்கும் அளவிற்கு நாட்டில் கருப்பு பணம் உள்ளது என கூறியவர் பிரதமர் மோடி. ஆனால் 15 லட்ச ரூபாய் கொடுப்பேன் என்று கூறியவர் ராகுல் காந்தி. எனவே அந்த பணத்தை காங்கிரஸ் கட்சி கொடுக்கட்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சரின் போலீஸ் தலையீடு காரணமாக, மீண்டும் இங்கு மத ரீதியான பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகிவிடக்கூடாது. அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM