நாடளாவிய ரீதியில் இன்று (23) எரிவாயு விநியோகிக்கப்படும் முறை மற்றும் எரிவாயு விற்பனைக்காக உள்ள விற்பனை முகவர் நிலையங்கள் தொடர்பாக லிட்ரோ நிறுவனம் விசேட அறிக்கைiயான்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (23) நாடளாவிய ரீதியில் உள்ள 394 விற்பனை முகவர் நிலையங்களின் ஊடாக எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு விற்பனை நிலையத்திற்கும் விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை குறித்தும் லிட்ரோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.