ரஷ்ய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்த உக்ரைன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்துவரும் நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரை போர்க்குற்றவாளியாக கைது செய்துள்ள உக்ரைன், அவ்வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரின்போது, 21 வயதான ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதாக போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் வடகிழக்கில் உள்ள சுமி பகுதியில் ஒரு கிராமத்தில் உக்ரைன் குடிமகனை தலையில் சுட்டுக் கொன்றுள்ளார். தன் மீதான அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்ட ஷிஷிமரின், அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

latest tamil news

இந்த நிலையில் ரஷ்ய – உக்ரைன் போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்ற விசாரணையில் இன்று (மே 23) தீர்ப்பு வழங்கியது. அதன்படி, போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வாடிம் ஷிஷிமரின்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.