திருப்பூர் அருகே குளிக்கச் சென்ற பெண் மற்றும் சிறுமி பாறைக்குழியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் அப்பகுதியைச் சேர்ந்த உமா என்பவர் தனது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் துணிகளை துவைக்க சென்றுள்ளார். அப்போது தனது குழந்தைகள் மற்றும் அவர்களது தோழிகளையும் அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக உமாவின் மகள் தோழி காவியா கால் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை காப்பாற்ற முயன்ற உமாவும் பாறைக்குழியிள் மூழ்கி உள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உமா மற்றும் காவியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM