விமான பயணிகளுக்கு இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்றோட்ட வசதிகள் கூடுதலாக கிடைக்கும் வகையில், மின்சார செலவை குறைக்கும் வகையிலும் சென்னை விமான நிலையத்தில் அதிநவீன ‘ஸ்கைலைட் சிஸ்டம்’ என்ற அமைப்பு நிறுவப்பட உள்ளது.
சூரிய வெளிச்சம் நேரடியாக விமானநிலையத்தின் உள்பகுதிக்கு வருவது போல், ஆறு மீட்டர் அளவில் வட்ட வடிவில், 10-க்கும் மேற்பட்ட ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் வகையில், சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.