மொத்தமாக சாம்பலாகும் நகரம்… ரஷ்யா திட்டத்தை அம்பலப்படுத்திய உக்ரைன்


கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் துருப்புகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் Severodonetsk பகுதியில் ரஷ்ய துருப்புகள் முன்னேறிவருவதாகவும், முக்கிய பகுதிகளை சாம்பலாக்கும் திட்டத்தை ரஷ்யா செயல்படுத்தி வருவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Severodonetsk மற்றும் அதன் இரட்டை நகரங்களை கைப்பற்றும் முனைப்புடன் ரஷ்யா ஏப்ரல் மத்தியில் இருந்தே கடுமையாக போரிட்டு வருகிறது.

உக்ரைனின் தலைநகரான கீவ்வைக் கைப்பற்றுவதற்கான முன்னெடுப்புகளைக் கைவிட்ட பிறகு ரஷ்யா தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி கவனம் செலுத்தியது.

மொத்தமாக சாம்பலாகும் நகரம்... ரஷ்யா திட்டத்தை அம்பலப்படுத்திய உக்ரைன்

டான்பாஸ் பகுதியில் ரஷ்ய துருப்புகளின் திட்டத்தை Luhansk ஆளுநர் Serhiy Haidai என்பவரே அம்பலப்படுத்தியுள்ளார்.
மொத்தமாக எரித்து சாம்பலாக்கும் திட்டம் டான்பாஸ் பகுதிகளில் ரஷ்யா செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Severodonetsk பகுதியை உக்ரைன் வரபடத்தில் இருந்தே அப்புறப்படுத்தும் திட்டம் இது என்றார் அவர்.
டான்பாஸில் ரஷ்யா கண்மூடித்தனமான குண்டுவீச்சுகளை நடத்தியதாக கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.

மொத்தமாக சாம்பலாகும் நகரம்... ரஷ்யா திட்டத்தை அம்பலப்படுத்திய உக்ரைன்

இதனிடையே, Luhansk-ல் ரஷ்ய துருப்புகள் பல நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ஆளுநர் Serhiy Haidai தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரேனிய இராணுவம் அதன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், டான்பாஸில் உள்ள மற்ற மாகாணமான டொனெட்ஸ்க் மீது ரஷ்ய துருப்புகளின் குண்டுவீச்சில் குறைந்தது ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.