இந்தியா – ஜப்பான் இடையிலான கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், வன்முறை, பயங்கரவாதம் போன்ற சவால்களில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற புத்தர் காட்டிய பாதையில் உலகம் பயணிக்க வேண்டும் என்றார்.

விவேகானந்தர் தனது வரலாற்று சிறப்புமிக்க உரைக்காக சிகாகோ செல்லும் முன், அவர் ஜப்பானுக்கு வருகை தந்ததாக குறிப்பிட்ட அவர், ஜப்பானிய இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.