வாரணாசி: ‘ஞானவாபி வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் யாருடைய மனு முதலில் விசாரிக்கப்படும் என்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும்’ என்று வாரணாசி நீதிபதி தெரிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஞானவாபியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதிக அனுபவம் உள்ளவர்கள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அதனடிப்படையில் வாரணாசி மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் விஷ்வேஷா முன்னிலையில் நேற்று விசாரணை தொடங்கியது. இருதரப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். வழக்கறிஞர் ஆணையரின் ஆய்வு முடிந்துள்ளது. வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கை மற்றும் வீடியோ புகைப்படங்களின் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரினார். மஸ்ஜித் கமிட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை ஏற்று கொள்ள முடியாது. எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எந்த மனுவை முதலில் எடுப்பது என்பது குறித்து இன்று தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்ததாக இந்துக்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் மதன்மோகன் யாதவ் தெரிவித்தார். இவ்வழக்கின் விசாரணையை அடுத்து நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.சிவலிங்கத்தை வழிபட மனுஇதற்கிடையே, ஞானவாபி மசூதியில் கண்ெடடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தை வழிபடவும், பூஜை செய்யவும் அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.