ஐஐடி மும்பையில் படித்து முக்கிய பதவியில் இருக்கும் நபர்கள்!

ஐஐடி மும்பை பவாய் ஏரிக்கரை அருகில் அமைக்கப்பட்டுள்ளது. 1958-ம் ஆண்டு யுனெஸ்கோ மற்றும் அப்போதைய சோவியத் அரசின் பண மற்றும் நுட்ப உதவியுடன் நிறுவப்பட்டது ஐஐடி மும்பை.

ஐஐடி மும்பை இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொழில்நுட்பக் கல்லூரியாகும். 14 கல்வித்துறைகளும், 10 பல்துறை மையங்களும், 3 சிறப்புக் கல்லூரிகளும், பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் மேம்பட்ட ஆய்வு மையங்களும், ஆய்வுக்கூடங்களும் ஐஐடி மும்பை வளாகத்தில் இருக்கின்றன.

இங்கு படித்த பலர் இந்திய மற்றும் உலக நாடுகளின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவியில் இருக்கிறார்கள். அவர்கள் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நிதியமைச்சர் இல்லாமல் இயங்கும் இலங்கை.. எப்படி?

பராக் அகர்வல்

பராக் அகர்வல்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஐஐடி மும்பையின் முன்னாள் மாணவர் ஆவார். ஐஐடி – ஜேஈஈ தேர்வில் 77வது ரேன்க் எடுத்த இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினி அறிவியல் துறையில் பி.எச்.டி பட்டம் பெற்றார். 2011-ம் ஆண்டு டிவிட்டரில் மென்பொருள் பொறியியல் வல்லுநராக வேலைக்கு சேந்த இவர்2021 நவம்பர் மாதம் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இப்போது டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்க இருப்பதால் பராக் அகர்வால் அந்த பதவியிலிருந்து விலகினால் 42 மில்லியன் டாலர் அவருக்கு இழப்பீடாகக் கிடைக்கும் என கூறுகின்றனர்.

சலில் பரேக்

சலில் பரேக்

ஐஐடி மும்பையில் ஏரோனாட்டிக்கல் இஞ்னியரிங் படித்தவர் சலில் பரேக். 2018-ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிர்வாக பொறுப்பேற்றார் சலில் பரேக். இவரது காலத்தில் இந்தியாவின் நம்பர் 11 ஐடி நிறுவனமான டிசிஎஸ் விட அதிக லாபம் இன்போசிஸ் பெற்றது. அதற்காக இவரது பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ சிவன்
 

இஸ்ரோ சிவன்

மட்ராஸ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் 190- ஆண்டு ஏரோனாட்டிக்கல் இஞ்னியரிங் படித்த சிவன், 1982-ம் ஆண்டு பெங்களூரு ஐஐஎஸ்சி கல்லூரியில் எம்.இ ஏரோ ஸ்பேஸ் இஞ்னியரிங் பட்டம் பெற்றார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு ஐஐடி மும்பையில் ஏரோ ஸ்பேஸ் இஞ்னியரிங்கில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.

இந்திய வான்வெளி துறையின் சாதனைகளான சந்திரயான் 2, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே-III திட்டங்களில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால்

2008-ம் ஆண்டு ஐஐடி மும்பையில் பாவிஷ் அகர்வால் கணினி அறிவியல் பொறியியல் பட்டம் பெற்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலில் பணிபுரிய பாவிஷ் அவர்கால், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓலா நிறுவனத்தைப் பெங்களூருவில் தொடங்கினார். இப்போது ஓலா எலக்ட்ரிக் என்ற இரண்டு சக்கர வாகன நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

நந்தன் நீலகேணி

நந்தன் நீலகேணி

இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேணி ஐஐடி மும்பையில் எலக்ட்ரிக்கல் இஞ்னியரிங் பயின்றார். இவர் தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் ஆதார் உருவாகக் காரணமாக இருந்தவர் இவர் ஆவார்.

ராகுல் யாதவ்

ராகுல் யாதவ்

ஹவுசிங்.காம் நிறுவன தலைவர் ராகுல் யாதவ் ஐஐடி மும்பையின் முன்னாள் மானவர் ஆவார். இன்று இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய நிறுவனமாக ஹவுசிங்.காம் உள்ளது.

பரூல் குப்தா

பரூல் குப்தா

மாற்று கல்வியை வலியுறுத்தும் ஸ்பிர்ங் போர்டு இணை நிறுவனர் மற்றும் தலைவர் பரூல் குப்தா ஐஐடி மும்பையில் எலக்ட்ரிக்கல் இஞ்னியரிங் படித்த முன்னாள் மாணவியாவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IIT-Bombay Alumnus On Top Companies

ஐஐடி மும்பையில் படித்து முக்கிய பதவியில் இருக்கும் நபர்கள்! | IIT-Bombay Alumnus On Top Companies

Story first published: Monday, May 23, 2022, 23:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.