ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் கார்த்திக் முதல் கோலை பதிவு செய்தார்.
இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில், இந்திய அணியில் விளையாடும் அரியலூரைச் சேர்ந்த தமிழக வீரர் கார்த்திக் இந்திய அணிக்காக தனது முதல் கோலை அடித்தார்.
இந்நிலையில், கார்த்திக்கின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் உள்ள டிவியில் அந்த ஒளிபரப்பு இல்லாத காரணத்தால் பக்கத்து வீட்டில் இருந்த டிவியில் தனது மகன் கோல் அடித்ததை பார்த்து கார்த்திக்கின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இறுதியில் இந்தியா பாக் இடையேயான போட்டி 1:1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM