தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் இருந்து விலகுவதாக 10 பொறியியல் கல்லூரிகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவதும் தருவாயில் உள்ளது. இதனை அடுத்து பொறியியல் கலந்தாய்வுக்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், மாணவர் சேர்க்கையில் இருந்து தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகள் விலக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயத்தில் அந்த கல்லூரிகளில் இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். தேவைப்பட்டால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கொடுத்துள்ளது.