தமிழ் எழுத்துக்களால் உருவப் படம்: நெகிழ்ந்த ஆனந்த் மகேந்திரா

Anand Mahindra Tamil News: இந்தியாவில் வலம் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மகேந்திரா. மகேந்திரா குழுமத்தின் தலைவரான இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தனித்துவமானவர்கள் மற்றும் சமூகத்தில் சாதனைகள் படைப்பவர்களை சமூக வலைதளம் வாயிலாக பாராட்டக்கூடிய முதல் நபராக இவர் இருந்து வருகிறார். இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

குறிப்பாக, கோவையைச் சேர்ந்த இட்லி பாட்டி எனப்படும் கமலாத்தால் என்பவர் 80 வயதிலும் இட்லி சுட்டு மிகக் குறைந்த வயதில் விற்பனை செய்து வருகிறார். இந்த விடயம் அறிந்த ஆனந்த் மகேந்திரா, அவரது வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அந்த பாட்டியின் உழைப்பையும் திறனையும் பாராட்டி இருந்தார். மேலும், அவருக்கு சொந்த வீடு ஒன்றும் கட்டி கொடுத்துள்ளார். இதை சமீபத்தில் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார்.

இந்நிலையில், ஆனந்த் மகேந்திரா தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்துரு ஓவிய கலைஞர் கணேஷ் என்பவரை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக இன்று பாராட்டியுள்ளார். காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ஓவியர் கணேஷ், ஆனந்த் மகேந்திராவின் உருவத்தை தமிழின் பண்டைய எழுத்துக்கள் உட்பட 741 எழுத்துக்களைக் கொண்டே படமாக வரைந்துள்ளார்.

இந்தப் படம் வரைந்ததை அவர் வீடியோவாக பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மகேந்திராவை டேக் செய்து பகிர்ந்துள்ளார். மேலும், “741 பழமையான தமிழ் எழுத்துக்களால் உங்கள் படத்தை வரைந்துள்ளேன். இந்த வகையான முதல் ஓவியங்களில் இதுவும் ஒன்று. இது பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஓவியர் கணேஷின் ட்விட்டுக்கு பதில் ட்வீட் செய்துள்ள ஆனந்த் மகேந்திரா, “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் வீடியோ பதிவை 208.1 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் 1500க்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.