டிவிஸ் லேபாரட்டீஸ் நிறுவனம் மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 78% அதிகரித்து, 895 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மருந்து உற்பத்தி நிறுவனமான இதன் நிகர லாபம் கடந்த ஆண்டில் 502 கோடி ரூபாயாக இருந்தது.
இதே அதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 2518 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1788 கோடி ரூபாயாக இருந்ததாக பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லூலூ குரூப்: கர்நாடகாவில் 2000 கோடி முதலீடு.. மிகப்பெரிய திட்டத்திற்கு அரசுடன் ஒப்பந்தம்..!
டிவிடெண்ட் அறிவிப்பு
இதே மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் இதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 2960 கோடி ரூபாயாகும். இது கடந்த 2021ம் நிதியாண்டில் 1984 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதனையடுத்து இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவானது ஒரு பங்குக்கு 30 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதன் முக மதிப்பி ஒரு மதிப்பு 2 ரூபாயாகும்.
எப்போது டிவிடெண்ட்?
இந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் முடிவடைந்த 30 நாட்களில் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடாந்திர கூட்டம், டிவிடெண்ட் குறித்தான அறிவிப்பு விரைவில் அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது முன்னணி ஆக்டிவ் மருந்து பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
இன்றைய பங்கு விலை?
NSE-யில் இப்பங்கின் விலையானது இன்று 9.45% குறைந்து, 3897.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 4438.80 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 3874.35 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 5425.10 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச பங்கு விலையானது 3788.95 ரூபாயாகும்.
BSEயில் இப்பங்கின் விலையானது இன்று 9.50% குறைந்து, 3897.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 4438.30 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 3875.95 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 5425 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச பங்கு விலையானது 3790 ரூபாயாகும்.
BHEL
BHEL நிறுவனமும் இன்று அதன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இதன் நிகர லாபம் 912.47 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டில் 1036.32 கோடி நஷ்டத்தினை கண்டிருந்தது. இதன் வருவாய் விகிதம் 8181.72 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டில் 7245.16 கோடி ரூபாயாகும். இதன் செலவினங்கள் 7091.29 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுல் 8644.28 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனமுன்ம் பங்குக்கு 0.40 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது.
This pharma stock recommends Dividend of Rs.30. check details
Divis Laboratories has announced a dividend of Rs 30 per share for the quarter.