இன்றைய காலகட்டத்தில் என்ன தான் பல ஆயிரம் திட்டங்கள் இருந்தாலும் அவற்றில் சிறந்ததாக பார்க்கப்படுவது, வங்கி பிக்சட் டெபாசிட்கள் தான்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது நிதி நிறுவனங்களில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டங்கள் பற்றித் தான்.
ஹெச் டி எஃப் சி, ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட், பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் என்ன வட்டி விகிதம்? எதில் வட்டி விகிதம் அதிகம். கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
3 மடங்கு அதிக நஷ்டத்தில் சோமேட்டோ.. பங்கு முதலீட்டாளர்களுக்குத் திக் திக்..!
![ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1540960727shriram-transport-finance-stock-jxchsgoldsilverreports-gsr-tile-1653318316.jpg)
ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ்
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்டில் குடிமக்கள் 8.40% வரையில் வட்டி விகிதம் பெறலாம். இதே மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை பெறலாம். இதன் மூலம் 9.05% வரையில் வட்டி விகிதம் பெறலாம். டெபாசிட் முதிர்ச்சியடைந்த அனைத்து புதுபித்தல்களிலும் 25 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக கிடைக்கும். ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் கிரிசில் ஆல் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பு மதிப்பீட்டில் ஒன்றாகும். AAA மதிப்பீடுகள் உயர் கடன் தரத்தினை குறிக்கும்.
![ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் - வட்டி விகிதம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1532535641-5049-down-1653318413.jpg)
ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் – வட்டி விகிதம்
12 மாதம் – வருடத்திற்கான வட்டி விகிதம் – 6.5%
15 மாதம் – வருடத்திற்கான வட்டி விகிதம் – 6.8%
24 மாதம் – வருடத்திற்கான வட்டி விகிதம் – 6.97%
30 மாதம் – வருடத்திற்கான வட்டி விகிதம் – 8.2%
36 மாதம் – வருடத்திற்கான வட்டி விகிதம் – 8.36%
45 மாதம் – வருடத்திற்கான வட்டி விகிதம் – 8.68%
48 மாதம் – வருடத்திற்கான வட்டி விகிதம் – 8.76%
60 மாதம் – வருடத்திற்கான வட்டி விகிதம் – 9.25%
![பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/bajajfinance-1586438284-1591230188-1611144645-1653318448.jpg)
பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்
பஜாஜ் பைனான்ஸில் குடிமக்களுக்கு அதிகபட்சமான ஆண்டுக்கு 7.45% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.45%மும் வழங்கப்படும். இதில் 15 மாதங்கள், 18 மாதங்கள், 22 மாதங்கள், 33 மாதங்கள், 44 மாதங்கள் உள்ளன. உங்கள் டெபாசிட் 15,000 ரூபாயில் இருந்து தொடங்கும்போது, உங்களுக்கு கூடுதலாக 0.25% வட்டியாக கிடைக்கும். இதில் குறைந்தபட்ச லாக் இன் காலம் 3 மாதங்களாகும். பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்- ஆல், FAAA/Stable என்ற உயர் மதிப்பீட்டினை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது உயர் கடன் தரத்தினை குறிக்கிறது.
![ஹெச் டி எஃப் சி லிமிடெட்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653344111_850_hdfc-bank5-1601470461-1651417982.jpg)
ஹெச் டி எஃப் சி லிமிடெட்
ஹெச் டி எஃப் சி லிமிடெட் மிக பாதுகாப்பான சேமிப்பு திட்டத்தினை வழங்குகிறது. இதன் மூலம் பாதுகாப்பாக உங்கள் பணத்தை டெபாசிய் செய்யல்லாம். இக்ரா, கிரிசில் ஆய்வு நிறுவனங்கள் AAA மதிப்பீட்டினை பெற்றுள்ளது. இது உங்கள் வைப்பு தொகௌ அதனுடன் பாதுகாப்பதை குறிக்கிறது. 33 மாதங்கள், 66 மாதங்கள், 77 மாதங்கள், 99 மாதங்கள் ஆகிய காலகட்டத்தில் டெபாசிட்டினை செய்து கொள்ளலாம். நீங்கள் இதன் மூலம் 20,000 ரூபாயினை டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் 40,000 ரூபாய் தொகையினை குறைந்தபட்சம் செய்து கொள்ளலாம். மாதாந்திர திட்டத்தின் கீழ் 6.45%மும், 99 மாத திட்டத்தின் கீழ் 6.95%மும் வட்டியினை பெறலாம்.
HDFC Vs Shriram Transport Vs Bajaj Finance ltd: which one is best for investment?
You can see how much the interest rate is higher at financial institutions including HDFC, Shri Ram Transport, Bajaj Accounting Ltd., where and which is better.