சிக்கப்பள்ளபுரா: அணைக்கட்டின் சுவற்றில் ஏற முயன்ற வாலிபர் கால் தவறி விழுந்த பதைபதைக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளபுரா மாவட்டம், சீனிவாசபுரா அருகே உள்ள நீர்தேக்கத்துக்கு கவுரிபிதனூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது நிரம்பி வழியும் நீர்தேக்க சுவற்றின் மீது ஏறியுள்ளார். இதனை கண்ட அவரின் நண்பர்களும் உற்சாகமூட்டி செல்போனில் வீடியோ எடுத்தனர். 20 அடிக்கும் மேல் சென்ற நிலையில் வாலிபர் நிலை தடுமாறியதால் கால் தவறி கீழே சறுக்கி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நீர்தேக்க சுவற்றில் இருந்து கீழே விழும் பதைபதைக்கும் காட்சி சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அணை மீது ஏற தடை விதிக்கப்பட்டதை மீறிய அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653350413_Tamil_News_5_24_2022_30610294.jpg)