![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653352870_NTLRG_20220523131525534112.jpg)
சூப்பர் ஹீரோ ஆகிறார் சிவராஜ்குமார்
அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தின் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் சச்சின். தற்போது அவர் சிவராஜ்குமாருடன இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் படம் இயக்குகிறார். கார்பரேட் கம்பெனிகளுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். இது ஒரு சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது.
இதுகுறித்து சச்சின் கூறியிருப்பதாவது: சிவராஜ்குமாருடன் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவரை சந்தித்து கதையை சொன்னதும் உடனேயே ஒப்புக் கொண்டார். சிவ ராஜ்குமாரிடம் இருக்கும் திறமைகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வரும் படமாக இது இருக்கும் என்றார்.
இந்த படத்தில் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தமா கதாபாத்திரத்தை தழுவி சூப்பர் ஹீரோ பாத்திரம் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகள் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சிவராஜ்குமார் தற்போது தனது 125வது படமான வேதா படத்திலும் யோகராஜ் பட் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.