புதுடெல்லி: இந்தியாவில் ஜவுளி முதல் ஆட்டோ மொபைல் துறை வரை தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை நிலவுவதாகவும், முதலீடு செய்ய வருமாறும் ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று டோக்கியோவில் அந்நாட்டின் பெரிய தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜப்பானிலுள்ள என்இசி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் நோபுஹிரோ என்டோ, சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் மசாயோஷி சன், சுசூகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் ஒசாமு சுசூகி உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்தியாவில் ஜவுளி துறை முதல் ஆட்டோமொபைல்ஸ் துறை வரையிலும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலும் ஜப்பான் தொழில் அதிபர்கள் தொழில் தொடங்கலாம் என்றும் பிரதமர் மோடி அப்போது அழைப்பு விடுத்தார்.
இதுதவிர யுனிக்லோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தடாஷி யனாய் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.