பெண்ணின் கைகளை கட்டி தலைமுடியை அறுத்த கொடுமை..! போற போக்குல 3 காதல் விபரீதம்..!

பெண் ஒருவரின் கைகளைக் கட்டி வீட்டுக்கு அழைத்து சென்ற கஞ்சா போதை ஆசாமி, அந்த பெண்ணின் தலைமுடியை கத்தியால் அறுத்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ‘காத்துவாக்குல ஆளுக்கு ரெண்டு காதல்’ செய்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பெண் ஒருவரின் கைகளை கட்டி அழைத்து வந்த போதை ஆசாமி ஒருவன், அந்த பெண்ணின் தலைமுடியை முதலில் கத்தரிக்கோலால் கத்தரிக்க முயல்கிறான்

அந்த கத்தரிக்கோல் கத்தரிக்காமல் அவனை சோதிக்க, ஆத்திரம் அடைந்த அந்த போதை ஆசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து , புள்ள மனசில ஆசையை உண்டாக்கி, எத்தனை பேரை வீணாக்கி இருக்க ….? எனக்கேட்டபடியே அந்த பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்து ஆவேசமாக அறுக்க தொடங்கினான்.

ஆபாசமாக திட்டிய படியே, அந்த பெண்ணின் தலைமுடியை கொத்தாக அறுத்து வீசினான்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 2 பேருக்கு இடையே காத்துவாக்குல 2க்கும் மேற்பட்ட காதல்கள் மலர்ந்ததால் நிகழ்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த வீடியோவில் கைகள் கட்டப்பட்ட பெண்ணின் பெயர் பானு என்பதும், அவரது தலைமுடியை கத்தியால் அறுக்கும் ஆசாமி கார்த்தி என்பதும் தெரியவந்துள்ளது.

பானு 2 வது கணவரான கார்த்திக்கை பிரிந்து 3 வதாக ஒருவருடன் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் மனைவியை பிரிந்து பானுவை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து குடித்தனம் நடத்திவந்த கார்த்திக்கிற்கு ஆத்திரத்தை உண்டாக்கி உள்ளது.

இதையடுத்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பானுவை தேடிக் கண்டுபிடித்த, கார்த்தி அந்த பெண்ணின் கைகளை கட்டி அழைத்து வந்து, ஆசைக்காட்டி தன்னை போல நிறைய பேரின் வாழ்க்கையை கெடுத்ததாக குற்றஞ்சாட்டி அதற்கு பழிவாங்குவதாக கூறி தலைமுடியை அறுத்து விபரீத செயலில் இறங்கி உள்ளார். தலைமுடியை அறுத்த காதலன் கார்த்திக் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.