கேஜிஎஃப் 2-ம் பாகம் திரைப்படம், வெளியாகி 40 நாட்களை கடந்த நிலையிலும், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்து வருகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப். 2’. கன்னடம் தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 வாரங்கள் ஆன போதிலும், பல திரையரங்குகளில் வரவேற்பு குறைந்த வண்ணம் இல்லை. இதனால் எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், உலகளவிலும் பல சாதனைகளை செய்து வருகிறது. அந்தவகையில் கனடாவில் மிகப்பெரியளவிலான பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ள கே.ஜி.எஃப்.2, கனடாவில் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடும் படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க… உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்
#KGFChapter2 WW Box Office
Week 1 to 5 – ₹ 1210.53 cr
Week 6
Day 1 – ₹ 3.10 cr
Day 2 – ₹ 3.48 cr
Day 3 – ₹ 4.02 cr
Day 4 – ₹ 4.68 cr
Total – ₹ 1225.81 crDREAM RUN continues.
— Manobala Vijayabalan (@ManobalaV) May 23, 2022
கனடாவில் இப்படத்தை மைசூர் ஸ்டூடியா ஹவுஸ் கனடா என்ற நிறுவனம் கனடா தெலுங்கு திரைப்படங்கள் அமைத்த கூட்டணியின் சார்பில் வெளியானது. வெளியான நாள்தொடங்கி பல்வேறு சாதனைகளை முறியடித்து, புதியவற்றை உருவாக்கி வரும் கே.ஜி.எஃப், ஒரே நேரத்தில் அதிக ஷோ திரையடப்பட்ட முதல் கன்னட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ.1,225.81 கோடி பாக்ஸ் ஆபிஸில் சம்பாதித்திருப்பதாக வணிக ரீதியான ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த மாத இறுதியில் வெளியான ஒரு தகவலின்படி, தமிழகத்தில் படம் வெளியான 2 வாரங்கள் கழித்தும்கூட நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் என்ற கணக்கில், 30 கோடி ரூபாய் வசூலித்தது ‘கே.ஜி.எஃப். 2’. இதேபோல் இந்தியில், 2 வாரங்களில் 321.12 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 900 கோடி ரூபாயை வருவாய் ஈட்டியிருந்ததுது.