ஆந்திரா: தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கவேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். வாணியம்பாடி, தும்பேரி பேர்ணாம்பட்டு வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 16 மாதத்தில் 13 வழக்குகள் தனது குப்பம் தொகுதியில் பதிவாகி உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.