வேலூர்: காட்பாடி அருகே அடகுக் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சேர்காடு கூட்டு சாலையில் இந்துமதி என்பவரின் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். அடகு கடையில் 30 கிலோ வெள்ளி, 93 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது யார் என போலீஸ் விசாரித்து வருகிறார்கள் .