தங்கம் (gold ) விலையானது இரண்டாவது வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
எனினும் ஆபரண சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இந்த சரிவானது அடுத்து என்ன செய்யலாம்? இனி குறையவே குறையாதா? நிபுணர்களின் கணிப்பு என்ன?
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
டாலர் நிலவரம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது நிலையானதாக மாறியுள்ள நிலையில், தங்கம் விலையானது உயர்ந்து காணப்படுகின்றது. தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக டாலர் மதிப்பு தற்போது வலுவான காராணியாக மாறியுள்ள நிலையில், தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து சற்று குறைந்து காணப்படுகிறது. சரிவில் உள்ள டாலரின் மதிப்பானது, தங்கத்தினை குறைவான விலைக்கு வாங்க வழிவகுக்கலாம். ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.
பத்திர சந்தை
அதிகரித்து வரும் பத்திர சந்தை, வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைக்கலாம். மேலும் நடப்பு ஆண்டில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை ஆகஸ்ட் மாதத்தில் 2% வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சப்ளை மற்றும் தேவையில் நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் விலைவாசியானது உச்சம் தொட்டுள்ளது. இது தொடர்ந்து பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.
பொருளாதார சரிவு
சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பங்கு சந்தைகளும் மேற்கோண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் Vs தங்கம்
தொடர்ந்து சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 7.61 டாலர்கள் அதிகரித்து, 1855.36 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையினையும் உடைக்கவில்லை. ஆக இது மேற்கொண்டு ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.10% அதிகரித்து, 21.745 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளியினை சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 113 ரூபாய் அதிகரித்து, 51,020 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 101 ரூபாய் குறைந்து, 61,211 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 4823 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து, 38,584 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 5260 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 42,080 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 70 பைசா குறைந்து, 65.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 658 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 65,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், எனினும் மீடியம் டெர்மிலும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. ஆக இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
gold price on 24th may 2022: why gold price is falling today in jewellery market?
Although the price of gold has risen in the international market, the price of jewelry gold has fallen.