இந்தியாவில் மேலும் 1,675 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,675 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 1,635 பேர் குணமடைந்தனர். 31 பேர் உயிரிழந்தனர்.தற்போது 14,841 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,26,00,747 பேராகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24,490 ஆனது.தற்போது வரை 192.52 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.