லக்னோ:
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதையடுத்து அந்தந்த மாநிலத் தலைவர்களை பதவி விலகுமாறு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தினார்.
இதனால், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி காலியாகவுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கட்சியின் புதிய மாநிலத் தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தை குறித்து ரஷித் கூறுகையில், ‘உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளது. எனினும், இது உள்கட்சி கூட்டம் என்பதால் இதுபற்றிய தகவல்களை வெளியிட முடியாது’ என கூறினார்.