போரில் ரஷ்யா வெற்றி பெறாவிட்டால்… ரஷ்யப் பெண் கூறும் சில்லிடவைக்கும் செய்தி


உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும், இல்லையென்றால், மொத்த மனுக்குலத்துக்கும் மோசமான முடிவு ஏற்படும் என்று கூறியுள்ளார் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் தலைவரான ஒரு பெண்.

புடின் ஆதரவு ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றின் தலைவரான Margarita Simonyan என்னும் பெண்தான் இந்த சில்லிடவைக்கும் செய்தியை தெரிவித்துள்ளது.

நாங்கள் உக்ரைன் போரில் தோற்றுவிடுவோம், மேற்கத்திய நாடுகள் வெற்றி பெறும் என அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள். ஆனால், அது சாத்தியமே இல்லை என்பது அவர்களுக்கு புரியமாட்டேன்கிறது என்று கூறும் Margarita, ஒன்றில் நாங்கள் வெற்றி பெறுவோம், அல்லது, மொத்த மனுக்குலத்துக்கும் மோசமான முடிவு ஏற்படும் என்கிறார்.

அதாவது, ரஷ்யா போரில் வெற்றிபெறாவிட்டால், அணுகுண்டு வீசுவோம் என்னும் பொருள் பட அவர் பேசுவதாகவும், அப்படி அணுகுண்டு வீசப்படும் நிலையில் எதிரி நாடுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்ல. ஆக மொத்தத்தில், மொத்த மனுக்குலத்துக்கும் அழிவுதான் என்ற அர்த்தத்தில் அவர் அப்படிச் சொல்வதாக கருதப்படுகிறது.

மேலும் ரஷ்யா மீதான தடைகள் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பது குறித்துப் பேசும் Margarita, அவை நிரந்தரமாக இருக்கத்தான் போகின்றன, ஆகவே, ரஷ்ய மக்களே, புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள் என்கிறார்.

இப்படி ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தடை விதிப்பதால், நம் பிள்ளைகள் இனி மேற்கத்திய நாடுகளில் சென்று கல்வி பெற முடியாது என்று சிலர் வருந்துகிறார்கள் என்று கூறும் Margarita, அது நமக்கு நல்லதுதான், காரணம் மேற்கத்திய நாடுகள் தங்கள் கலாச்சாரத்தால் நேரே நரகத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றன.
 

ஒரு பத்து ஆண்டுகள் ஆகும்போது, நம்முடைய பிள்ளைகள் மேற்கத்திய நாடுகளில் படிக்காதது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவீர்கள் என்று கூறும் Margarita, அமெரிக்காவில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! 

போரில் ரஷ்யா வெற்றி பெறாவிட்டால்... ரஷ்யப் பெண் கூறும் சில்லிடவைக்கும் செய்தி

போரில் ரஷ்யா வெற்றி பெறாவிட்டால்... ரஷ்யப் பெண் கூறும் சில்லிடவைக்கும் செய்தி

போரில் ரஷ்யா வெற்றி பெறாவிட்டால்... ரஷ்யப் பெண் கூறும் சில்லிடவைக்கும் செய்தி



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.