கர்நாடக மாநிலம் பெல்லாரியில், ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற 56 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சிஎஸ்எம் நிறுவனத்தில் காப்பாளராக பணிபுரிந்து வந்த நீலகண்டா என்பவர் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தை திருடியதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் அந்த நபரை கைது செய்த போலீசார், திருடப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர்.