கிரிப்டோகரன்சிகள் குறித்து தெளிவில்லாத நிலையே பல நாடுகளில் உள்ளது. சில நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், சில நாடுகளில் இன்னும் முழுமையாக இதனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பல விதமாக கருத்துகள் கிரிப்டோகரன்சி முதலீடு குறித்து இருந்து வருகின்றது.
இதற்கிடையில் சமீபத்திய வாரமாக கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களே முதலீடு செய்யலாமா? வேண்டாமா என்று எண்ணும் அளவுக்கு சந்தை தாறுமாறாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. இதுவே முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி குழப்பமான நிலைக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, கிரிப்டோகரன்சிகள் குறித்து ஒரு கூறியுள்ளது, முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்பிஐ உறுதியான முடிவு.. ஈஎம்ஐ உயர்வது நிச்சயம்.. உஷார் மக்களே..!
ஒழுங்குமுறை அவசியம்
இறையாண்மை உத்தரவாதத்தால் ஆதரிக்கப்படாத எதுவும் அசெட் வகைகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது நாணயமாக இருக்காது. பிட்காயின் நாணயமாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் கிரிப்டோகரன்சிகள் மூலம் வேகமாக சேவைகளை வழங்க முடியும். ஆனால் அதற்கென ஒழுங்குமுறை அவசியம் என கூறியுள்ளார்.
ஒரு போதும் நாணயமாக முடியாது
கிரிப்டோகரன்சிகள் எப்போதும் சொத்துகளாக (Assets) இருக்கலாம். நாணயமாக இருக்க முடியாது. எந்தவொரு நாணயத்திற்கும் யாரோ ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் கிரிப்டோகரன்சிகளில் அப்படி ஏதும் இல்லை. அதோடு கரன்சிகள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். இது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் கிரிப்டோகரன்சிகள் அவ்வாறு இல்லை.
கிரிப்டோகரன்சி மீது நம்பிக்கை
நாங்கள் ஒரு புறம் நாணயத்தினையும், மறுபுறம் நம்பிக்கையையும் வைத்திருக்க முடியாது. இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கிடையில் மத்திய வங்கிகள் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து கூறியவர், கிரிப்டோகரன்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். மக்கள் மத்திய வங்கிகள் மீது இழந்த நம்பிக்கையை விட இது அதிகம் என கூறியுள்ளார்.
இன்றைய நிலவரம் என்ன?
தற்போது பிட்காயின் மதிப்பானது 2.59% குறைந்து, 29,362.34 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் கடந்த 24 மணி நேரத்தில் இதன் உச்சம் 30,622.99 ரூபாயாகும். இதே 24 மணி நேர குறைந்தபட்ச மதிப்பு 28,863.49 டாலர்களாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த காயின் மதிப்பானது கிட்டதட்ட 37% சரிவினையே கண்டுள்ளது.
மற்ற கரன்சிகள் நிலவரம்?
பிட்காயின் மட்டும் அல்ல, எத்திரியம், எக்ஸ் ஆர் பி, கார்டெனோ, ஸ்டெல்ல, போல்கடேட், டோஜ்காயின், ஷிபா இனு, யூனிஸ்வாப், லைட்காயின் உள்ளிட்ட பல கரன்சிகளும் சரிவிலேயே காணப்படுகின்றன.
Bitcoin can’t be money just because it has got coin in its name: IMF Chief
Anything not supported by a sovereign guarantee can be one of the assets. But it will not be a currency. He also said that Bitcoin cannot be a currency – IMF Chief