கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலைகளையும் ஏறிய `முதல்’ அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இதற்காக கோவை மாவட்ட மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சவால்மிக்க வெள்ளியங்கிரி ஏழாவது மலையை அமைச்சர் தனது மனைவியுடன் ஏரிய வீடியோவை தற்போது வெளியாட்டியுள்ளார் அவர்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களிலும் ஆய்வு மேற்கொண்டுவரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஆய்வு மேற்கொண்டார். பின்பு மலை ஏறுவதில் உள்ள சிரமம், பக்தர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க… ‘திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்’ -சுப.வீரபாண்டியன்
பெயரளவில் சிறிது தூரம் மட்டும் முதல் மலையில் ஏறிச் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சர் தனது மனைவியுடன் ஏழு மலைகளையும் ஏறி சாமி தரிசனம் செய்தார். மலைக்கோயில்களில் அதிக தூரம் கொண்டதாகவும், கடினமான பாதை, கடும் குளிர் காற்று புடவை கொண்ட சவால் மிக்க ஏழு மலைகளையும் அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் ஏறி சாமி தரிசனம் செய்தார்.
இது கோவை மாவட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சவால்மிக்க ஏழாவது மலையை ஏறிக்கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM