புதுடெல்லி:
இந்தியாவில் புதிதாக 1,675 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
கடந்த 21-ந் தேதி பாதிப்பு 2,323 ஆகவும், 22-ந் தேதி 2,226 ஆகவும் இருந்தது. நேற்று 2,022 ஆக குறைந்த நிலையில், 3-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரத்து 68 ஆக உயர்ந்தது.
கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 31 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நேற்று உயிரிழப்பு இல்லை.
இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,490 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,635 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 737 ஆக உயர்ந்தது.
தற்போது 14,841 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். .
நாடு முழுவதும் நேற்று 13,76,878 டோஸ்களும், இதுவரை 192 கோடியே 52 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 4,07,626 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.74 கோடியாக உயர்ந்துள்ளது.