அவரை மாதிரி வீரரை CSK அணியில் எடுக்கனும்! இல்லேன்னா.. தோனி படையை எச்சரிக்கும் ஜாம்பவான்


ரெய்னாவின் இடத்தை நிரப்பும் வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் நடையை கட்டியது அந்த அணி.

இது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த வருடம் சென்னையின் சுமாரான பேட்டிங்கும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. குறிப்பாக கடந்த வருடம் ஆரஞ்சு தொப்பியை வென்ற ருதுராஜ் இம்முறை சுமாராக செயல்பட்ட நிலையில் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, மொயின் அலி போன்ற பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

அவரை மாதிரி வீரரை CSK அணியில் எடுக்கனும்! இல்லேன்னா.. தோனி படையை எச்சரிக்கும் ஜாம்பவான்

IPL/Twitter

கடைசி பந்தில் ட்விஸ்ட்! வெளியேறிய வீரர்களை மீண்டும் அழைத்த நடுவர்… குழப்பத்தை ஏற்படுத்திய வீடியோ

மேலும் சுரேஷ் ரெய்னா இல்லாததால்தான் சென்னை தோற்றது என்றும் அவர் இல்லை என்றால் சென்னையும் இதர அணிகளை போன்ற சாதாரண அணி தான் என்றும் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

2021இல் சுமாராக பேட்டிங் செய்தார் என்பதற்காக காயம் என்ற பெயரில் கழற்றி விட்ட அந்த அணி நிர்வாகம் இந்த வருடம் ரெய்னாவை ஏலத்தில் வாங்கி பெஞ்சில் கூட அமர வைக்காமல் டாட்டா காட்டி நன்றி இல்லாமல் நடந்து கொண்டது.

இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, சீக்கிரம் ரெய்னாவை போன்ற ஒரு தரமான பேட்ஸ்மேனை கண்டறிய வேண்டும் இல்லையெனில் வரும் காலங்களில் அந்த அணியின் நிலைமை மோசமாகிவிடும்.
கடந்த பல வருடங்களாக சென்னை மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அவர்கள் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை மறந்துவிட்டனர்.

அவர் ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்த ஒரு வீரர் ரெய்னா. அவர் இடத்தை யாரேனும் நிரப்பினால் மட்டுமே நிறைய வித்தியாசம் ஏற்படும் என்று கூறினார்.

அவரை மாதிரி வீரரை CSK அணியில் எடுக்கனும்! இல்லேன்னா.. தோனி படையை எச்சரிக்கும் ஜாம்பவான்

Twitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.