இரும்பு கம்பியால் மருமகளை அடித்துக்கொண்டு மாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் கழுவங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு கடந்த 2012 ஆண்டு தனலெட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி வெளியில் சென்ற வேளையில் தனலெட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனலெட்சுமியின் மாமியார் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அவர் காவல்துறை அளித்த வாக்குமூலத்தில் தனது மருமகளுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை எனவும் இது குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.