உதகை தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு – குவியும் சுற்றுலா பயணிகள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை ஆட்டம்பாட்டத்துடன் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்,  

நேற்றுடன் 4 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 81 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். நல்ல காலநிலை நிலவுவதாலும், இன்றுடன் மலர் கண்காட்சி நிறைவடைவதாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் ஒரு லட்சத்தை தாண்டும் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
ooty flower show 30 thousand tourists visited in 2 days | ஊட்டி மலர்  கண்காட்சியை 2 நாட்களில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 20ம் தேதி மலர் கண்காட்சி துவங்கியது. பகல் நேரத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால், 20 ம் தேதி துவங்கி கடந்த நான்கு நாட்களில் 81 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தமிழகம்,கேரளா,கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலத்தில் இருந்து வருகை தந்தனர்.  

இந்த கண்காட்சிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஆட்டம் பாட்டத்துடன் பொழுதை கழித்தனர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இங்கு அமைந்துள்ள பரந்த புல்வெளி மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனர். இன்று நிறைவு நாள் என்பதால் இன்று மாலை சிறந்த அரங்கு அமைப்பு, சிறந்த மலர் தோட்டம், சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  பங்கேற்பாளர்களுக்கு பரிசு கோப்பைகள், சான்றுகள் வழங்கப்படவுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.