குவாட் கூட்டுறவில் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை குவாட் அமைப்பின் தலைவர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலம் குவாட் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டிற்கு தலா 25 மாணவர்கள் வீதம் 100 மாணவர்களின் முதுநிலை மற்றும் முனைவர் படிப்பை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தொடர இந்த திட்டம் உதவிபுரிகிறது.
ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிகிறது.