கொடைக்கானலில் 59-வது மலர்க்கண்காட்சியை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மதிவேந்தன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
பிரையண்ட் பூங்காவில் வண்ணமயமாக பூத்துக்குலுங்கும் விதவிதமான பூக்களையும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், மலைப்பூண்டு, மயில், டைனோசர் உள்ளிட்ட உருவங்களை பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மலர்க்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
மலர்க்கண்காட்சி இன்று தொடங்கி கொடைக்கானல்
6 நாட்கள் வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.