இருசக்கர வாகனம் மோதி காட்டருமை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை – அடைக்கனூர்பகுதியில் காட்டெருமை நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில், அந்த வழியை சிவக்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பூ மார்க்கெட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக சிவகுமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே காட்டெருமை கன்று பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் சிவகுமாருக்கு பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காட்டெருமை கன்றை மீட்ட வனத்துறையினர் காட்டுப் பகுதியில் தகனம் செய்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.