டோக்கியோ: ஜப்பானில் நடந்து வரும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்தித்து பேசினர்.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ‘குவாட் மாநாடு’ ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நம் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.இந்த மாநாட்டிற்கு இடையில் மோடியும், பைடனும் அமர்ந்து பேசினர். இந்த பேச்சில் இரு நாட்டு உறவு மேலும் வலுப்பெறும் என்று இரு தலைவர்கள் உறுதி அளித்தனர். இந்திய, அமெரிக்க உறவு வலுப்பெற தொடர்ந்து நம்பிக்கையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா வெளிப்படையாகவும் , திறந்த மனதுடனும் இருப்பதாக மோடி தெரிவித்தார்.
கோவிட் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் பணிகள் சிறப்பானதாக இருந்ததாக அதிபர் பைடன் பாராட்டினார். இந்த சந்திப்பில் உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்பட்டதாக பைடன் தெரிவித்தார்.
டோக்கியோ: ஜப்பானில் நடந்து வரும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்தித்து பேசினர்.nsimg3037232nsimgஅமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.