குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க அதிபர் பைடன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். டோக்கியோவில் நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பில் இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை மட்டுமின்றி உலக நாடுகளின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பரந்த அளவில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
PM Modi, US President Biden to virtually meet tomorrow, review bilateral  cooperation

குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு, கட்டமைப்பை வலுப்படுத்துதல் அச்சுறுத்தல்களை சீர் செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் குறித்தும், இந்திய அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடி சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

சந்திப்பின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா-இந்தியா இடையே இரு நாட்டின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக குவாட் மாநாடு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான பொருளாதார ஒத்துழைப்பு இந்தியா அமெரிக்க இடையேயான கூட்டுறவை அதிகரித்துள்ளது என்றும், இந்தியா அமெரிக்க இடையே வர்த்தக முதலீடு அதிகரித்து வருகிறது ஆனால் இரு நாட்டின் ஆற்றலும் அதை விட அதிகம் என்பதால் இன்னும் அதிக அளவில் முதலீடுகளை வர்த்தங்கங்களும் நடைபெற வேண்டும் என்றார். அமெரிக்க முதலீடு ஊக்குவிப்பு” ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளும்  உறுதியான, நிலையான முன்னேற்றத்தை காணும் என தான் நம்புவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
Joe Biden To Meet PM Narendra Modi In Japan Next Week: US National Security  Adviser

இந்தியா-அமெரிக்க என்பதற்கு உண்மையான அர்த்தம் நம்பிக்கையின் கூட்டு என்றும் ஜோ பைடனிடம் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியா-அமெரிக்கா இணைந்து நிறைய விஷயங்களை செயல்படுத்தலாம். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மிக நெருக்கமாக ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

இந்தியாவுடன் “அமெரிக்க பைனான்ஸ் கார்ப்பரேஷன்” உடன்படிக்கை செய்துள்ளதுக்கு மகிழ்ச்சி தெரிவித்த ஜோ பைடன், தடுப்பூசி திட்டத்தை புதுப்பிக்க இந்தியா-அமெரிக்கா இடையே எடுக்கப்பட்ட முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா மனிதத்தன்மையன்ற முறையில் எடுத்த போர் குறித்தும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து விவாதித்தாகவும்,  இந்த விளைவுகளை தணிப்பது குறித்து இந்தியா-அமெரிக்கா  தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.