பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை பணியில் சேர மாட்டோம் – காஷ்மீர் பண்டிதர்கள்

காஷ்மீர்:
மே மாதம் 12-ந் தேதி காஷ்மீர் பண்டிதர் சமுதாயத்தைச் சேர்ந்த ராகுல் பாத் என்ற அரசு ஊழியர் அவரது அலுவலகத்தில் வைத்து  பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காஷ்மீர்  பண்டிதர்கள் ராகுல் பாத்தின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும், பள்ளத்தாக்கில் உள்ள பண்டித் இனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தொழிலாளர்கள் இனி காஷ்மீரில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பணிக்கு செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் லெப்டினண்ட் கவர்னர் மனோஜ் சின்கா, ஷெய்க்பூரில் உள்ள இடம்பெயர் தொழிலாளர்களான காஷ்மீர் பண்டிதர்கள் முகாமிற்கு இன்று சென்று தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “இந்த நிர்வாகம் தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது. உங்களது பிரச்சினைகள் நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.
இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்  ஜம்முவில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.