ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து பல நாடுகள் புடினுக்கு நெருக்கமான செல்வந்தர்கள் மீது தடைகள் விதித்தன.
முதலில் தயங்கிய சுவிட்சர்லாந்து, பிறகு மற்ற நாடுகளின் வற்புறுத்தலுக்குப் பின் ரஷ்ய செல்வந்தர்கள் மீது தடைகள் விதிக்கத் துவங்கியது.
தற்போது அந்நாடு ரஷ்ய செல்வந்தர்கள் மீது தடைகள் விதித்து வரும் நிலையில், தடைகளிலிருந்த தப்ப ரஷ்யர்கள் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி வருவதால், விதித்தத் தடைகளை நீக்க வேண்டிய ஒரு நிலைமைக்கு சுவிட்சர்லாந்து ஆளாகியுள்ளது.
உதாரணமாக, ரஷ்ய செல்வந்தரான Andrey Melnichenko என்பவர் EuroChem என்னும் நிறுவனத்தின் போர்டு இயக்குநர்களில் ஒருவராக இருந்துவந்தார். அவர் மீது தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், அவரது EuroChem நிறுவனத்தின் மீது தடைகள் விதிக்கும் நிலை உருவானது.
ஆனால், அந்த நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை தன் மனைவியான Alexandra பெயருக்கு மாற்றிவிட்டார் அவர்.
Andrey மீது தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பே, அதாவது மார்ச் மாதம் 10ஆம் திகதிக்கு முன்பே அவர் தன் பங்குகளை தன் மனைவி பேருக்கு மாற்றிவிட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
Alexandra மீது தடைகள் எதுவும் இல்லை. எனவே தற்போது EuroChem நிறுவனத்தின் மீதும் தடைகள் விதிக்க முடியாத ஒரு நிலை உருவாகிவிட்டது.
இந்த EuroChem நிறுவனம், சுவிட்சலாந்தின் சூரிச்சுக்கு அருகிலுள்ள Zug நகரில் அமைந்துள்ள நிலையில், அம்மாகாண அதிகாரிகள் தங்கள் மாகாணத்தில் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களோ, ரஷ்ய செல்வந்தர்களோ இல்லை என அறிவித்துள்ள விடயம் வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.